அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி ஊராட்சியில் இன்று ஊராட்சி மன்றத்தலைவர் முத்துலட்சுமி தலைமையில் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் பாலா முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிலர் கணக்கு வழக்கு சரியில்லை என்று கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து போலீசார் அமைதியான முறையில் கோரிக்கைகளை மட்டும் முன்வைக்குமாறு அறிவுறுத்தினர். அதனை தொடர்ந்து கிராம சபை கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் காஜா மைதீன் வந்தே நவாஸ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment