அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி ஊராட்சி சர்ச் தெருவில் திறந்த வெளியில் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரிப்பதால் அப்பகுதியில் கடும் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. குப்பைகளை சுத்தப்படுத்தாமல் தீ வைத்து எரிப்பதால் விஷ புகை உருவாகி அப்பகுதி மக்களுக்கு சுவாச பிரச்சினைகள் உண்டாகிறது.
இதனால் தங்களுக்கு கண் எரிச்சல், இருமல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுபோன்று குப்பைகளை தீ வைத்து எரிக்காமல் அதை அப்புறப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment