பள்ளி மாணவர்கள் சிலர் ஆபத்தை உணராமல் பேருந்துகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். படியில் தொங்கியபடி பயணம் செய்வதை சாகசம் செய்வதாக நினைத்து கொண்டு ஆபத்தான பயணம் மேற்க் கொள்கின்றனர். இதனால் எதிர்பாராத விதமாக பல விபத்துகளும் ஏற்படுகின்றன.
இந்நிலையில் விருதுநகர் மாவட்ட காவல்துறையினர் ஆபத்தை உணராமல் செய்யும் செயல் ஆபத்தில் தான் போய் முடியும் "படியில் பயணம் நொடியில் மரணம்" மாணவர்கள் படியில் பயணம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக வலைதளங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment