அருப்புக்கோட்டை ஶ்ரீ சொக்கநாத சுவாமி கோவிலில் இன்று புரட்டாசி மாத பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. முதலாவதாக நந்தி தேவருக்கு சிறப்பு அபிஷேகங்களும் தீப தூப ஆராதனைகளும் நடைபெற்றன இதையடுத்து சொக்கநாதருக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
அப்போது பிரதோஷ சிவன் பாடல்களையும் நந்திதேவர் பாடல்களையும் பக்தர்கள் பாடியவண்ணம் அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகளை தரிசித்து வழிபட்டனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment