பயறு ஒண்டர் பயறு வகை பயிர்களில் விளைச்சலை அதிகரிக்கும் பயிர் ஊக்கியாகும். இது பூக்கள் உதிர்வதை கட்டுப்படுத்தும் வறட்சியை தாங்கும் தன்மையை அதிகரிக்கும். இதன் மூலம் விளைச்சல் 20 சதவீதம் அதிகம் கிடைக்க பெறும். இதனை பூக்கும் பருவத்தில் ஏக்கருக்கு இரண்டு கிலோ வீதம் 200 லிட்டர் தண்ணீருடன் தெளிக்க வேண்டும்.
இதனை விவசாயிகளிடம் பிரபலப்படுத்தும் நோக்கில் அருப்புக்கோட்டை ராமானுஜபுரம் கிராமத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ட்ரோன் மூலம் தெளித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் அருப்புக்கோட்டை நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஸ்பீச் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் கோவை வேளாண் பல்கலைக்கழக பயிர் வினையியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் பாபு ராஜேந்திர பிரசாத் மற்றும் வேளாண் அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் வினையியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் அ.செந்தில் மற்றும் அருப்புக்கோட்டை வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி.ராஜா பாபு ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
No comments:
Post a Comment