அருப்புக்கோட்டை 30 வது வார்டு அம்பலம் கருத்தையா தெரு வழியாக தினமும் ஏராளமான இருசக்கர வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். அகமுடையார் மகாலில் இருந்து பஜார் முருகன் கோவில் வரை இணைக்கும் இந்த தெருவில் வேகத்தடை இல்லாததால் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிவேகமாக சென்று வந்தனர்.
இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு கருதி நகர்மன்ற உறுப்பினர் சுசிலா தேவி முன்னிலையில் வேகத்தடை அமைக்கப்பட்டது. ஏற்கனவே சாலைகள் குண்டும் குழியுமாக உள்ள நிலையில் இதுபோன்ற வேகத்தடைகள் தேவையா என வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
No comments:
Post a Comment