அருப்புக்கோட்டை டவுன் பகுதியில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ செளண்டம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் செளண்டம்மன் அம்பு விடும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. கோயிலில் இருந்து வீதி உலாவாக புறப்பட்ட செளண்டம்மன் டெலிபோன் ரோட்டு உள்ளிட்ட பகுதிகளில் வீதி உலா சென்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டு மகிழ்ந்தனர். அதனை தொடர்ந்து பழைய தேவாங்கர் கல்லூரி மைதானத்தில் அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு போட்டி போட்டு அம்பை எடுத்து வழிபட்டு மகிழ்ந்தனர்.
No comments:
Post a Comment