அருப்புக்கோட்டை காமராஜர் நகர் பகுதியில் திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள கடைக்காரர்கள் பொதுமக்கள் இறைச்சி கழிவுகளையும் குப்பைகளையும் சிலர் திறந்த வெளியில் கொட்டுகின்றனர்.
இதனால் குப்பைகள் காற்றில் பறந்து சாலைகளில் செல்வோர் மீது விழுகிறது. மேலும் இதுபோன்ற திறந்த வெளியில் குப்பைகளை கொட்டுவதால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே திறந்த வெளியில் குப்பைகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment