சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று மாலை மனித சங்கிலி நடைபெற்றது. இதில் அமைதியை பாதுகாக்கவும், மதச்சார்பின்மையை பாதுகாக்கவும், இந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெற்றது என விசிக, கம்யூனிஸ்ட், உள்ளிட்ட கட்சிகள் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரில் இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் தி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, காங்கிரஸ், தமுமுக, மமக, தமிழ் புலிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அல்அமீன் பள்ளி வரை மனித சங்கிலியாக நின்று மத்திய பாஜக அரசிற்கு எதிராகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
இந்த மனித சங்கிலி போராட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment