அருப்புக்கோட்டை அருகே வசிக்கும் 40 வயது உள்ள பெண் ஒருவர் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி தனது உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக விருதுநகர் சென்றுவிட்டு மீண்டும் ஊர் திரும்புவதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக காரில் வந்த அந்த பெண்ணின் நண்பர் ஊரில் இறக்கி விடுவதாக கூறி காரில் ஏற்றிச்சென்றுள்ளார். இந்நிலையில் அருப்புக்கோட்டை அருகே பாலவநத்தம் கோபாலபுரம் சாலையில் சென்று கொண்டிருந்த போது இவர்களை இருசக்கர வாகனம் மற்றும் காரில் வந்து வழிமறித்த ஒரு கும்பல் ஆண் நண்பரை தாக்கிவிட்டு அந்த பெண்ணை மறைவான இடத்திற்கு தூக்கி சென்று பாலியல் வன்புணர்ச்சி செய்து அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகைகளை பறித்து கொண்டு தப்பி ஓடியது.
இந்த வழக்கில் சீனிவாசன், ஜெயக்குமார், ராம்குமார், பிரபாகரன் என்ற போராளி, விஜய், அழகுராஜ் உள்ளிட்ட 6 பேரை தாலுகா போலீசார் கைது செய்தனர். மேலும் ஒரு சிறுவனை கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். இந்நிலையில் இன்று கைது செய்யப்பட்ட ஜந்து பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் பரிந்துரை பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் மேகநாத ரெட்டி அவர்களை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment