அருப்புக்கோட்டை நகராட்சி 2வது வார்டில் மக்களை தேடி மருத்துவம் மூலமாக கை கால் மூட்டு மற்றும் இடுப்பு வலியால் அவதிப்படும் பொதுமக்களுக்கான இயற்கை மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் உதவி மருத்துவ அலுவலர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு யோகா பயிற்சியும் இயற்கை மருந்தும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர் மன்ற உறுப்பினர் தவமணி மல்லையா மற்றும் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment