அருப்புக்கோட்டை நகராட்சி சுகாதாரப்பிரிவில் பணிபுரிந்து வந்த தூய்மை பணியாளர் இராமகிருஷ்ணன் இன்று பணி ஓய்வு பெற்றார் அவருக்கு நகராட்சி அலுவலகத்தில் ஆனணயர் அசோக்குமார் தலைமையில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் இராமகிருஷ்ணனுக்கு சால்வை அணிவிக்கப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
மேலும் தூய்மை பணியாளர் இராமகிருஷ்ணனை கெளரவபடுத்தும் விதமாக நகராட்சி ஆணையாளர் வாகனத்திலேயே அவர் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு இறக்கி விடப்பட்டார். இதில் நகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment