மாணவர்கள் தங்களது உடல்நலம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் நடைபெற்ற இந்த முகாமினை வட்டார வளர்ச்சி அலுவலர் காஜாமைதீன் பந்தே நவாஸ் துவக்கிவைத்தார். மீரா மருத்துவமனை, ஜெனித் விஷன் கிளினிக், என்.எஸ்.பல் மருத்துவமனை, சார்பில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் மாணவர்களுக்கு குருதி வகை கண்டறியப்பட்டது. மேலும் பார்வை குறைபாடு அறிந்து ஆலோசனை வழங்கப்பட்டது.
மாணவர்களின் உடல்நலம் அறிந்து தேவையான மருந்து மாத்திரைகள் டானிக் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த முகாமில் மாணவர்களின் பெற்றோருக்கும் அப்பகுதி பொதுமக்களுக்கும் இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த முகாமில் மருத்துவர்கள் வெண்ணிலா, மன்சூர், சாதலி, சித்திக், பாத்திமா பள்ளி தாளாளர் காஜாமைதீன் பள்ளி செயளாலர் சம்சுதீன் பொருளாளர் ராஜா முகமது சேட் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment