மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் ஆசிரியர் சங்கமான மூட்டா சங்கத்தின் பொன்விழா மாநாட்டையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன அதன் ஒருபகுதியாக தேவாங்கர் கலை கல்லூரியில் கால்பந்தாட்ட போட்டிகள் இன்று துவங்கின.
இந்த போட்டியில் மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்ட கல்லூரிகளை சேர்ந்த 8 அணிகள் பங்கேற்றுள்ளன இந்த தொடக்க விழாவிற்கு பேராசிரியர் ஞானேஸ்வரன் தலைமை வகித்தார். பேராசிரியர் கோபால் வரவேற்புரையாற்றினார்.
மூட்டா சங்கத்தின் பொறுப்பாளர்கள் செந்தாமரைக்கண்ணன் பெரியசாமி, ராஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர். பேராசிரியர் உமாராணி நன்றியுரையாற்றினார். இந்த போட்டிகளை அருப்புக்கோட்டை நகர் மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் துவக்கி வைத்தார்.
போட்டிக்கான ஏற்பாடுகளை பேராசிரியர் செந்தில்குமார் உடற்கல்வி இயக்குனர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அதற்கான பரிசளிப்பு விழா நாளை நடைபெறுகிறது.
No comments:
Post a Comment