அருப்புக்கோட்டை அருகே தாதம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலி வேலை செய்துவரும் தம்பதியரின் மகள் எட்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு பள்ளிக்குச் செல்லாமல் ஆடு மேய்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் இருந்த அந்த சிறுமி தீடிரென மாயமானார் இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை இதனையடுத்து காணாமல்போன தனது மகளை கண்டுபிடித்து தருமாறு அந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment