தாயை கட்டையால் தாக்கிய மகன் மீது வழக்கு. - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 21 October 2022

தாயை கட்டையால் தாக்கிய மகன் மீது வழக்கு.

அருப்புக்கோட்டை வேல்முருகன் காலனியை சேர்ந்தவர் சாந்தி இவரது மகன் பழனிக்குமார், பழனிக்குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் பழனிக்குமாரை அவரது தாயார் சாப்பிட சொன்னதாகவும் ஆனால் பழனிக்குமார் எனக்கு வேண்டாம் நீ சாப்பிடு என கூறியதாகவும் அதற்கு சாந்தி நான் மாத்திரை போட்டுள்ளேன் என்னால் சாப்பிட முடியாது என கூறியுள்ளார். 


இதனால் ஆத்திரமடைந்த பழனிக்குமார் நான் சொன்னால் கேட்கமாட்டய எனக்கூறி கட்டையால் சாந்தியை தலைமையில் அடித்து காயப்படுத்தியுள்ளார். இதனையடுத்து சாந்தி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சாந்தி புகாரின்பேரில் பழனிக்குமார் மீது நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad