அருப்புக்கோட்டை காந்திநகர் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தம் அருகே திறந்து வெளியில் மூட்டை மூட்டையாக கொட்டப்படும் குப்பைகளால் கடும் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஹோட்டல், டீக்கடை, உள்ளிட்ட கடைக்காரர்கள் குப்பைகளை திறந்தவெளியில் கொட்டுகின்றனர். திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பைகள் காற்றில் பறந்து இருசக்கர வாகன ஓட்டிகளின் மேல் விழுகிறது.
இந்த பகுதி அருப்புக்கோட்டை நகராட்சி மற்றும் கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு நடுவில் இருப்பதால் எல்லை பிரச்சினை காரணமாக இந்த பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் அப்புறப்படுத்துவது இல்லை பல நாட்களாக தேங்கியுள்ள குப்பைகளால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் மூக்கை மூடியவாறு செல்கின்றனர்.
புறவழிச்சாலை நவீன பேருந்து நிறுத்தம் அருகே இது போன்று திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பைகள் நகரின் அழகை கெடுப்பது போல் உள்ளது. திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பைகளை அப்புறப்படுத்துவதோடு இதற்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment