அப்பொழுது அவர் பேசியது தமிழகத்தில் இனி வரும் காலங்களில் தேசிய முழுவதும் உள்ள சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் பொறுப்பாளர்கள் இதுபோன்று ஏழை எளிய முதியோர் இல்லம் மற்றும் குழந்தைகளுக்கு காப்பகத்தில் பண்டிகை நாட்களைக் கொண்டாடுமாறும் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
காப்பகத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு அத்தியாவசிய பொருளான போர்வை புத்தாடை மற்றும் இனிப்பு பொருட்கள் சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவன தலைவர் டாக்டர் எஸ். முத்துராமலிங்கம் அவர்கள் வழங்கி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் ஜெ .ராம் மணிகண்டன் தேசிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆர் .ரமேஷ் விருதுநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மற்றும் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கத்தின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் புத்தாடைகள் இனிப்புகள் வழங்கி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது, காப்பக்கத்தில் இயற்கை வளங்களை பெருக்க மரக்கன்றுகளும் நடப்பட்டது .
நிகழ்ச்சியின் முடிவில் ஜெ.ராம் மணிகண்டன், தேசிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அனைவருக்கும் நன்றி உரை கூறி நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment