விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருவண்ணாமலை பகுதியில், ரெட்டியபட்டி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயச்சந்திரன் தலைமையில், பள்ளிகள் மற்றும் கோவில்கள் அருகே சிகரெட், பீடி விற்பனையில் ஈடுபட்ட 8 கடைக்காரர்களுக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் 20 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும், ஒரு உணவகத்தில் இருந்து ஒரு கிலோ அஜினமோட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையில் சுகாதார ஆய்வாளர் நரேன் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment