அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை செங்குந்தர் உயர்நிலைப்பள்ளியில் இன்று நகராட்சி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நகர் மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி தலைமையில் நகராட்சி ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தூய்மை பணியாளரிடம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவேன் என பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து விவரிக்கப்பட்டது.
மேலும் ஒவ்வொரு வீடாக சென்று மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் 36வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சிவகாமி மற்றும் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment