விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக அருப்புக்கோட்டை சிங்காரதோப்பு தெருவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காய்ச்சல் முகாம் நடைபெற்றது.
மருத்துவர் கோமதி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மேலும் முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment