அருப்புக்கோட்டை புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கம்பு சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றன இந்த பயிர்களை காட்டுப்பன்றிகள் அடிக்கடி சேதப்படுத்தி வருகின்றன இந்நிலையில் விவசாயிகள் அதிகம் உள்ள புளியம்பட்டி பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்த கோரிக்கையை அவரிடம் மக்கள் முன் வைத்தனர். அமைச்சரும் அப்போது புளியம்பட்டி பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் அமைத்து தருவதாக உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில் புளியம்பட்டி முழுவதும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அண்ணாச்சி புளியம்பட்டி விஏஓ ஆபிஸ் என்னாச்சு என்று அமைச்சரை குறிப்பிட்டு திமுக கூட்டணி கட்சியான மதிமுகவை சேர்ந்த நகர செயலாளர் மணிவண்ணன் போஸ்டர் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment