அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட முகாம் ஊராட்சி மன்றதலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் ஊரக வளர்ச்சிதுறை, வேளாண்மை உழவர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, பொது சுகாதாரத்துறை, சமூக நலத்துறை, கல்வித்துறை, தொழிலாளர் நலத்துறை, உள்ளிட்ட பல துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு அரசால் செயல்படுத்தப்படும் பொதுமக்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து பேசினர்.

மேலும் 100 நாள் வேலை திட்ட பணிகள் குறித்து கேட்டறிந்ததோடு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றனர். இந்த முகாமில் திட்ட அலுவலர் வர்கீஸ் கோட்டாட்சியர் கல்யாண்குமார் வட்டார வளர்ச்சி அலுவலர் காஜா மைதீன் வந்தே நாவஸ் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment