அருப்புக்கோட்டை வேல்முருகன் காலனியை சேர்ந்தவர் முனீஸ்வரி இவரது கணவர் ஜெயக்குமார். ஜெயக்குமார் அதே பகுதியை சேர்ந்த லிங்கம் என்பவரிடம் வீட்டிற்கு தெரியாமல் கடன் வாங்கியுள்ளார். அதனை திருப்பி கொடுக்காததால் லிங்கம் உள்ளிட்ட ஏழு பேர் சேர்ந்து ஜெயக்குமார் வீட்டிற்கு சென்று ஜெயக்குமார் அவரது மனைவி முனீஸ்வரி மற்றும் முனீஸ்வரியின் மாமியாரையும் கையாலும் கற்களாலும் அடித்து காயப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து முனீஸ்வரி புகாரின்பேரில் நகர் காவல் நிலைய போலீசார் லிங்கம் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாமனார் மற்றும் மனைவியை தாக்கியவர் மீது வழக்கு
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியை சேர்ந்தவர் பொன்இருளன்(70) இவரது மகள் பாஞ்சாவை திருவிருந்தாள்புரத்தை சேர்ந்த இருளன் என்பவர் திருமணம் செய்து கொடுத்துள்ளார். ஆனால் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பாஞ்சா தற்போது பாளையம்பட்டியில் உள்ள தனது தந்தை பொன்இருளன் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் பொன்இருளன் தனது மகள் பாஞ்சாவுடன் கோபாலபுரம் பாலவநத்தம் சாலையில் உள்ள விவசாய காட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த பாஞ்சாவின் கணவர் இருளன் பீர் பாட்டில்களாலும் கற்களாலும் தனது மாமனார் பொன்இருளன் மற்றும் மனைவி பாஞ்சாவையும் தாக்கியுள்ளார். இதுகுறித்து பொன்இருளன் புகாரின்பேரில் நகர் காவல் நிலைய போலீசார் இருளின் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காரின் பின்னால் இருசக்கர வாகனம் மோதி விபத்து
அருப்புக்கோட்டை அன்பு நகரை சேர்ந்தவர் நாகநாதன் தொழிலதிபரான நாகநாதன் திருச்சுழி சாலையில் உள்ள தனது அலுவலகத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சுழி உள்ள தனியார் மொபைல் கடை அருகே அதி வேகமாக வந்த இருசக்கர வாகனம் நாகநாதன் ஓட்டிச் சென்ற காரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் கார் மற்றும் இருசக்கர வாகனம் சேதமானதுடன் இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த புதுத்தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் காயமடைந்தார். இந்த விபத்து குறித்து நாகநாதன் அளித்த புகாரின்பேரில் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் இருசக்கர வாகனத்தை ஒட்டி விபத்து ஏற்படுத்தியதாக விக்னேஸ்வரன் மீது நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment