தமிழகம் முழுவதும் நேற்று ஆயுத பூஜை விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தொழில் புரிவோர் பேருந்து ஓட்டுனர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள் என அனைவரும் தங்கள் பணிபுரியும் இடங்களில் பூஜை செய்து ஆயுத பூஜையை கொண்டாடினர். இந்நிலையில் அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுனர்கள் ஆயுத பூஜையை கொண்டாடினர்.
இந்த பூஜையில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டுனர்களுடன் இணைந்து ஆயுத பூஜையை கொண்டாடினார். முன்னதாக ஆயுத பூஜை கொண்டாட வந்த அமைச்சரை ஆட்டோ ஓட்டுனர்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர். அதனை தொடர்ந்து டெலிபோன் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் சன்னதியில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவிலும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தனது மனைவியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து ஆயுத பூஜை கொண்டாடினார். இதில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment