மதுரையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது குறித்து தமுமுக மற்றும் மமக சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் வரும் 6ம் தேதி மதுரையில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பாஜக அரசை கண்டித்தும் தமிழக ஆளுநரை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் அருப்புக்கோட்டை முஸ்லீம் தெருவில் இந்த ஆர்ப்பாட்டம் குறித்த தெருமுனை பிரச்சார விளக்கக் கூட்டம் தமுமுக மற்றும் மமக விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மதார்கான் தலைமையில் நடைபெற்ற இந்த தெருமுனை பிரச்சார கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் பந்தல்குடி சம்சுதீன் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கிப் பேசினார். இதில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment