அருப்புக்கோட்டை அருகே பாலையம் பட்டியில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு வேணு கோபால சுவாமி ஊர்வலமாக சென்று வில் அம்பு விடும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்ட வேணுகோபால் சுவாமி பாளையம்பட்டியின் முக்கிய வீதிகள் வழியாக சென்று தெப்பக்குளம் அருகே வில் அம்பு விடப்பட்டது.
இந்த அம்புகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் எடுத்து சென்றனர். இந்த நிகழ்ச்சியில் பாளையம்பட்டி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் புளியம்பட்டி அருள்மிகு ஶ்ரீ மாகாளியம்மன் திருக்கோயில் வில் அம்பு விடும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment