அருப்புக்கோட்டை காமராஜர் நகர் பகுதியில் கோட்டாட்சியர் இல்லம் அருகே புதிதாக வாறுகால் பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் இவ்வழியாக திருக்குமரன் நகர் செல்லும் மினி பேருந்து வழித்தடம் மாற்றப்பட்டு கோட்டாட்சியர் அலுவலகம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.
காமராஜர் நகர் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீர் அமைப்பதற்காக கடந்த ஜூலை 14ம் தேதி வருவாய்த்துறை அமைச்சர் பூமி பூஜை செய்தார். தற்போதுதான் வாறுகால் பாலம் கட்டப்பட்டு வருகிறது விரைவில் இந்த பணிகள் முடிந்தவுடன் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment