அருப்புக்கோட்டையில் விஜயதசமி நாளில் தொடங்கும் காரியங்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை அதன் காரணமாக இன்று கல்வி கலைகளை கற்க தொடங்குகின்றனர். விஜயதசமி தினத்தில் ப்ரீகேஜி, எல்கேஜி, அல்லது முதல் வகுப்பில் குழந்தைகள் சேர்க்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளிகளில் பொதுமக்கள் தங்களது குழந்தைகளை ஆரம்ப கல்வியில் போட்டி போட்டு கொண்டு சேர்த்தனர். அதிலும் குறிப்பாக ஒரு சில பள்ளிகளில் குழந்தைகளை நெல்மணியில் 'அ' என அட்சரம் எழுதி கல்வியை எழுத வைத்து குழந்தைகளின் கல்வியை ஆரம்பித்தனர்.
No comments:
Post a Comment