அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டி கம்மவார் துவக்க பள்ளி எதிரே மழை நீர் வரத்து கால்வாய் ஓடை தடுப்பு சுவரில் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு மரம் வளர்ப்பு போன்ற பல்வேறு சமூக சிந்தனையுடன் கூடிய விழிப்புணர்வு வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
பள்ளி எதிரே இது போன்ற ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளது மாணவர்கள் மத்தியில் நல்ல சிந்தனைகளை வளர்க்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோல் நகரில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி நகரின் அழகை கெடுப்பதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஓவியங்களை வரைய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment