அருப்புக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழி காட்டுதல்படி ஆரம்ப சுகாதார மையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் கலந்து கொண்டு 81 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார். இதில் நகர்மன்ற துணை தலைவர் பழனிச்சாமி நகர் நல அலுவலர் மற்றும் மருத்துவர் சுகாதார ஆய்வாளர் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment