அருப்புக்கோட்டை முகில் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் பாலாஜி (29) இவரது மனைவி ராஜலட்சுமி (29) இந்நிலையில் பாலாஜி ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து நஷ்டம் அடைந்ததாகவும் அதனை சரி செய்வதற்காக தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று அதை கட்ட முடியாமல் திணறி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 8ம் தேதி இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து திடீரென பாலாஜி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பாலாஜியின் மனைவி ராஜலட்சுமி புகாரின் பேரில் டவுன் போலீசார் நேற்று (09-10-2022) வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment