அருப்புக்கோட்டையில் சின்ன புளியம்பட்டி, நெசவாளர் காலனி, வீரலட்சுமி நகர், மணிநகரம், சண்முகநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மக்களின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருவது செவல்கண்மாய் பரந்து விரிந்த இந்த செவல்கண்மாய் முழுவதும் இப்போது ஆகாயத்தாமரை செடிகள் சூழ்ந்து காணப்படுகிறது.
சில இடங்களில் கண்மாயை ஆக்கிரமிப்பும் நடந்துள்ளது. மேலும் கண்மாய் முழுவதும் கழிவுநீர் கலந்து நீர் மாசடைந்து வருகிறது. முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் செவல்கண்மாயை தூர்வாரி ஆகாயத்தாமரை செடிகளை முழுவதும் அகற்றி கழிவுநீர் கலக்காமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் கண்மாயை சுற்றி பூங்கா அமைத்து சுற்றுலாத்தலம் போன்று மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment