விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி உள்ளது. அதன் ஒரு பகுதியாக அருப்புக்கோட்டை 36வது வார்டு பகுதியில் நகர்மன்ற உறுப்பினர் சிவகாமி ஏற்பாட்டில் வெள்ளைக்கோட்டை அண்ணா நகர் மற்றும் காளவாசல் பகுதியில் நகராட்சி சுகாதாரத்துறை சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
மேலும் வார்டு பகுதி முழுவதும் கொசு மருந்து அடிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் தற்போது மீண்டும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment