அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி தீர்த்தக்கரை பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் குமார் (27) இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேதமூர்த்தி என்பவருக்கும் முன்பகை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வேதமூர்த்தியின் மகன்கள் விக்னேஷ் பாபு மற்றும் அவருடைய தம்பி இருவரும் சேர்ந்து தனது தந்தையுடன் ஏற்பட்ட முன் பகையை மனதில் வைத்து விக்னேஷ் குமாரை கட்டையால் அடித்து காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து விக்னேஷ் குமார் புகாரின் பேரில் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் நேற்று (6-10-2022) விக்னேஷ் பாபு மற்றும் அவரது தம்பி மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment