காரியாபட்டி சக்கரக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலமணி (29) இவருக்கும் கீழ உப்பிலிகுண்டு கிராமத்தை சேர்ந்த பிரபு என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதியருக்கு குழந்தை இல்லை இந்நிலையில் பிரபுவின் குடும்பத்தார் வரதட்சணை கேட்டும் குழந்தை இல்லை எனக் கூறியும் பாலமணியை அடித்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாலமணி புகாரின் பேரில் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று (6-10-2022) பிரபு அவருடைய தந்தை வெள்ளைச்சாமி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment