தனியார் பெட்ரோல் பங்க் அருகே கிடந்த மூதாட்டி சடலம். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 21 October 2022

தனியார் பெட்ரோல் பங்க் அருகே கிடந்த மூதாட்டி சடலம்.

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே அடையாளம் தெரியாத மூதாட்டி சடலமாக கிடப்பதாக நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 


விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் அவர் பாளையம்பட்டியை சேர்ந்த அழகம்மாள்(85) என்றும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து காணாமல்போனது தெரியவந்தது. 


இதனையடுத்து அழகம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அழகம்மாள் மகன் ராஜு புகாரின்பேரில் நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad