வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை வேளையில் அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.
மழையால் பல இடங்களில் தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியது இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment