அருப்புக்கோட்டை ரயில்வே பீடர் சாலை அருகே உள்ள எம்.எஸ்.மஹாலில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பேரவையின் ஆலோசனை கூட்டம் பேரவை தலைவர் பொன்னுத்துரை தலைமையில் செயலாளர் எஸ்.எஸ்.அலி முன்னிலையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் எம்ஜிஆர் பிறந்தநாளை தமிழ்நாடு அளவில் அருப்புக்கோட்டையில் மிகப்பெரியதாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எம்ஜிஆர் பக்தர்கள் சபை நிர்வாகிகள் மற்றும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பேரவையின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment