
பழைய நண்பர்களை சந்தித்து கொண்ட மாணவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் தங்களது கல்லூரி அனுபவங்களையும் தங்களுக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியரை பற்றியும் தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் 1982-1985 ஆம் ஆண்டு பழைய ஆசிரியர்களும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தங்களது மாணவர்களை பற்றி பெருமையாக பேசி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கும் கல்லூரிக்கும் பழைய மாணவர்கள் நினைவு பரிசு வழங்கினர். அதேபோல் பழைய ஆசிரியர்கள் தங்களிடம் பயின்ற பழைய மாணவர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நீண்ட நாட்களுக்கு பிறகு பழைய நண்பர்களை சந்தித்து அனைவரும் ஒன்றாக இணைந்து கலந்துரையாடி இறுதியாக பழைய மாணவர்கள் விடைபெற்றனர். இந்நிகழ்ச்சியில் பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment