
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, மாவட்டத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள் பாதுகாப்பான கவுரவமான மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்து தருவதற்கும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அருப்புக்கோட்டை வட்டம் குல்லூர்சந்தையில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு ரூ 340 இலட்சம் மதிப்பில் 68 தொகுப்பு வீடுகளும். ரூ 11.30 இலட்சம் மதிப்பில் 2 தனி வீடுகளும் என மொத்தம் ரூ 3.51 கோடி மதிப்பில் 70 புதிய வீடுகள் கட்டுவதற்கு (13.7.2022) அன்று அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி தற்போது நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி இ.ஆ.ப, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் (மா.ஊ.வ.மு) திருமதி திலகவதி பொறியாளர் பாண்டியராஜன் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அறிவழகன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூரியகுமாரி, காஜா மைதீன், வந்தே நாவஸ் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment