மதுரை ஜாங்கிட் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிமேகலை இவருக்கும் அருப்புக்கோட்டை அருகே மல்லாங்கிணர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருக்கும் கடந்த 2006ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.
இந்நிலையில் திருமணமான சில நாட்களிலேயே மணிமேகலையை சதீஷ்குமாரும் அவரது தந்தை முத்துப்பாண்டியும் சேர்ந்து வீட்டை விட்டு விரட்டி விட்டதாகவும் அதனைத் தொடர்ந்து சதீஷ்குமார் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது இதுகுறித்து மணிமேகலை சதீஷ்குமாரிடம் கேட்டபோது சதீஷ்குமார் மணிமேகலையை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மணிமேகலை புகாரின் பேரில் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சதீஷ்குமார் அவரது தந்தை மற்றும் சதீஷ்குமார் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் அந்த பெண் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்
No comments:
Post a Comment