அருப்புக்கோட்டை மாகாராணி தியேட்டர் அருகே மதுரை சாலையில் வேகத்தடை இருப்பது தெரியாமல் அடிக்கடி இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது.
நேற்று இவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற மதுரை பெருங்குடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேகத்தடை இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
வேகத்தடை இருப்பதற்கான அடையாளம் தெரியாமல் இருப்பதே இதுபோன்ற விபத்து நடக்க காரணமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment