சிவகாசி அருகே, கோவில் மற்றும் பேருந்து நிறுத்தப்பகுதிகள் சிகரெட் விற்பனை செய்தவர்களுக்கு அபராதம். - தமிழக குரல் - விருதுநகர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 16 October 2022

சிவகாசி அருகே, கோவில் மற்றும் பேருந்து நிறுத்தப்பகுதிகள் சிகரெட் விற்பனை செய்தவர்களுக்கு அபராதம்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரம் பகுதியில், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கலுசிவலிங்கம் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் முத்துக்குமார் உத்தரவின் பேரில், கோவில்கள் மற்றும் பேருந்து நிறுத்தப்பகுதிகளில் சிகரெட், பீடி மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இசக்கியப்பா தலைமையில், திடீர் சோதனை நடத்தப்பட்டது. 

தடை செய்யப்பட்ட பகுதிகளில் சிகரெட், பீடி மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 16 கடைக்காரர்களுக்கு, தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சோதனையின் போது சுகாதார ஆய்வாளர்கள் சரவணகுமார், ஷேக்முகமது, சரவணப்பெருமாள், செல்வகுமார், கிருஷ்ணகுமார், அரவிந்த்குமார் உடன் இருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad