அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் கட்டங்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிவானந்தா காலனியில் சாமிநாதன் (55) என்பவர் அரசு அனுமதியின்றி எளிதில் தீபற்றக்கூடிய பட்டாசு தயாரிக்க பயன்படும் கருந்திரிகள் வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவரிடமிருந்து 16 குரோஸ் கருந்திரிகளை பறிமுதல் செய்த போலீசார் சாமிநாதன் மீது நேற்று (15-10-2022) வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment