விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான தூறல்மழை பெய்தது. சாத்தூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகள், படந்தால், பூசாரிபட்டி, சல்வார்பட்டி, வெற்றிலையூரணி, மேட்டமலை, வெங்கடாசலபுரம், மடத்துப்பட்டி, ஒத்தக்கடை, விஸ்வநத்தம் உள்ளிட்ட பல இடங்களிலும் நேற்று இரவு பரவலாக தூறல்மழை பெய்தது.
கடந்த இரண்டு நாட்களாக மாவட்டம் முழுவதும் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் இந்தப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில், விவசாயப் பணிகள் துவங்கியுள்ளன. தொடர் மழை பெய்து வருவதால் இந்த ஆண்டு விவசாயம் செழிப்பாக இருக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment