விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழக அரசின் பால் விலை உயர்வு மின்சார கட்டணம் உயர்வு மற்றும் வீட்டு தீர்வை உயர்த்திய திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இராஜபாளையம், ஜவஹர் மைதானத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, நகரத் தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர் மாவட்ட தலைவர் வி.கே. சுரேஷ் முன்னிலையில் நடைபெற்றது .இந்த ஆர்ப்பாட்டத்தில், சுகந்தம் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி முன்னணி நிர்வாகிகளும் பாரதியார் கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
இதேபோல், ஒன்றியம் சார்பில் இராஜபாளையம் செட்டியார் பட்டி பகுதியில் ஒன்றிய தலைவர் சிவசக்தி தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் போத்திராஜ். மாவட்ட செயலாளர் ராதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், பால் விலை உயர்வு மின்சார கட்டணம் உயர்வு என, மக்கள் மீது சுமையை ஏற்றும் திமுக அரசு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
No comments:
Post a Comment