அருப்புக்கோட்டை அருகே வெள்ளையாபுரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் கண்ணன் என்பவர் மகன் மாதேஸ்வரன்(19) இவர் விருதுநகரில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி கெமிஸ்ட்ரி படித்து வந்தார். இந்நிலையில் மாதேஸ்வரன் நேற்று கல்லூரி செல்வதற்காக அருப்புக்கோட்டையில் இருந்து அரசு நகரப்பேருந்தில் சென்றுள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் படியில் தொங்கியபடி மாதேஸ்வரன் பயணம் செய்துள்ளார். இந்நிலையில் பேருந்து பாலவநத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது படியில் தொங்கியபடி பயணம் செய்த மாதேஸ்வரன் தீடிரென பேருந்தில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தாலுகா போலீசார் மாணவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சக மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment