அருப்புக்கோட்டை புளியம்பட்டியில் இருந்து பெரிய கண்மாய்க்கு மழைநீர் செல்லும் வரத்து கால்வாய் ஓடைகள் அனைத்தும் தூர்வாரப்படாமல் புதர் மண்டி காணப்படுகிறது. இந்த ஓடை வழியாக வரும் மழை நீரை எதிர்பார்த்து மலையரசன் கோவில் பின்புறம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது.
தற்போது இந்த ஓடைகள் அனைத்தும் தூர்வாரப்படாமல் சுருங்கி கழிவுநீர் கால்வாயாக மாறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் நலன்கருதி இந்த ஓடையை தூர்வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment