அருப்புக்கோட்டை டெலிபோன் ரோட்டில் இருந்து முனீஸ்வரன் கோவிலுக்கு செல்லும் சாலையில் திறந்த வெளியில் குப்பைகளை கொட்டுவதால் கடும் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. அருகில் குப்பை தொட்டி இருந்தும் ஒரு சில பொதுமக்கள் திறந்த வெளியில் குப்பைகளை கொட்டுகின்றனர்.
இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. எனவே திறந்த வெளியில் குப்பைகளை கொட்டுவோரை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment